Sunday, December 13, 2009

விடுகதை

வழிப்போக்கன் ஒருவன் காட்டு வழியே சென்று கொண்டிருந்தான். அவன் காலில் முள் தைத்து விட்டது.அதை அகற்றும் வழியை எதிர்ப்பட்ட ஒரு ஆசாமியிடம் கேட்டதற்கு அவன் தனது பதிலை கீழே தந்துள்ள பாடலாக சொல்லிவிட்டுப் போனான்:

"பத்துரத புத்திரனின் மித்திரனின் சத்துருவின் பத்தினியின் காலெடுத்து தேய்."

புரிகிறதா உங்களுக்கு? முயன்று பாருங்களேன்

No comments: