Saturday, April 16, 2016




செருக்குற்றால் சறுக்குவோம் என்று உணர வேண்டும்.
அவ்வைப் பாட்டி இதை மிக அழகாக சொல்லியிருக்கிறாள் .
சுட்ட பழம் வேண்டுமா அல்லது சுடாத பழம் வேண்டுமா என்ற் இடைச் சிறுவன் கேட்ட கேள்வியால் கர்வ பங்கப் பட்ட தமிழ் பாட்டி பாடி வைத்துப் போயிருக்கிற  பாடல் இதோ:

"கருங்காலிக்கட்டைக்கு  நாணாக் கோடாலி
இருங்கதலித் தண்டுக்கு  நாணும் 
அருங்கானில் கார் எருமை மேய்க்கும் காளைக்குத் தோற்றனளே 
ஈரிரவு துஞ்சாது என் கண் "

கானகத்திலே நடந்தது அவ்வைக்கும், இடைச் சிறுவனுக்கும் மட்டுமே தெரியும். வேறு யாரும் பார்க்கவில்லை. அவ்வை இந்த நிகழ்வைப்  பதிவு செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது-ஆனாலும் தான் கர்வபங்க பட்டதை பாடலாய் பதிவு செய்கிறாள். தான் பெரிதும் கற்றவள், தமிழில் அளவற்ற புலமை தனக்கு உண்டு- இடைச் சிறுவன் தானே என்று  நினைத்தவளுக்கு பெரிய சறுக்கல் அல்லவா- தனது மன நிலையை எவ்வாறு உணர்த்துகிறாள் பாருங்கள்- "ஈரிரவு துஞ்சாது என் கண்"- சாதாரண இதைச் சிறுவனிடம் தோற்றுப் போய் விட்டேன் -இரண்டு நாட்கள் என்னால் உறங்க முடியாது என்று சொல்கிறாள். பெரிய துக்கமோ அல்லது அவமானமோ உண்டானால் நித்திரை நம்மிடமிருந்து விடை  பெற்று விடும்.
தனக்கு ஏற்பட்ட அவமானத்தை தனது சம காலத்தவர் மட்டுமில்லாது -தனது காலத்திற்க்கு பிறகு வரப்போகிற பலரும்   அறிய வேண்டும் என்றல்லவா பாடி வைத்து போயிருக்கிறாள் பாட்டி.எவ்வளவு பெரிய மனம் -தவறை ஒத்துக்கொள்வதில் தவறேதும் இல்லை என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறாள் அவ்வை.

Friday, April 15, 2016

இன்று ஸ்ரீ ராம நவமி . புண்ணிய தினம் . இணையற்ற இராமனின் திருவடிகளை நினைப்போம்.:

"அறம் பழுக்கும் தருவே என் குருவே என்றன்
ஆருயிர்க்கு ஒரு துணையே அரசே பூவை
நிறம்பழுக்க அழகு ஒழுகும் வடிவக் குன்றே
நெடுங்கடலுக்கு அணையளித்த நிலையே வெய்ய
மறம்பழுக்கும் இலங்கை இராவணனைப் பண்டோர்
வாளியினால் பணிகொண்ட மணியே வாய்மைத்
திறம் பழுக்கும் ஸ்ரீராம வள்ளலே  நின்
திருவருளே யன்றிமற்றோர் செயலி லேனே."
                                                           -அருட்சோதி இராமலிங்க சுவாமிகள்
"நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம என்ற இரண்டு எழுத்தினால்."

நாடிய பொருள் கைகூடும்
ஞானமும் புகழும் உண்டாம்
வீட்டில் வழியதாக்கும்
வேரியங் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை 
நீறு பட்டு அழிய வாகை
சூடிய சிலை இராமன்
தோள்வலி கூறுவோர்க்கே."
                                     கம்ப நாட்டாழ்வார்