Tuesday, February 23, 2010

கர்ப்பிணிப் பெண்களுக்கு ஓர் அரிய மருந்து

"ஹே சங்கர ஸ்மரஹர ப்ரமதாதிநாத
மன்னாதி சாம்ப சசிசூட ஹர த்ரிசூலின்
சம்போ ஸுகப்ரசவக்ருத் பவமே தயாளோ
ஸ்ரீமாத்ருபூத சிவ பாலயமாம் நமஸ்தே"

மேற்படி ஸ்லோகத்தை மூன்று முறை தினமும் சொல்லி நமஸ்காரம் செய்து வந்தால் ஸ்ரீ மட்டுவார் குழலம்மை உடனுறை ஸ்ரீ தாயுமானவர் கிருபையால் சுகப்பிரசவம் ஆகி பரம க்ஷேமங்கள் ஏற்படும்.

தேவாரத் திருப்பதிகம்

இது ஸ்ரீதாயுமானவ சுவாமியைப் பற்றிய பொதுவான சுலோகம்; இதையும் சொல்லி வரவும்:

"நன்றுடையானைத் தீயதிலானை
நரைவெள்ளேறொன்றுடையானை
உமையொரு பாகனுடையானைச்
சென்றடையாத திருவுடையானைச்
சிராப்பள்ளிக் குன்றுடையானைக்
கூற என்னுள்ளம் குளிரும்மே!"